மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
மெடிந்தியா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், ஊட்டச்சத்துகள் குறித்த கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மருத்துவ முகாமை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்துப் பேசியது: மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறுத் திட்டங்களைக் கொண்டுவந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக இதுவரை ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொண்டு நிறுவனங்களும்,மெடிந்தியா போன்ற அறக்கட்டளைகளும் அரசுக்கு ஒரு […]